- மிதுனம் :
புத்திசாலிதனத்திற்கு பெயர்பெற்ற மிதுன ராசி நேயர்களே!
பொருளாதாரத்தில் சீரான நிலையை உருவாக்க முயற்சிப்பீர்கள். புதிய வீடு மற்றும் வாகன யோகம் ஏற்படும். சற்று முயற்சிகள் அவசியம். கல்வியில் சில தடைகள் ஏற்படும். விளையாட்டில் கவனம் அதிகமாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு தடை உருவாகும். பொறுமை அவசியம். இடுப்பில் வலி அல்லது உட்காரும் இடங்களில் வயிற்றுபகுதிகளில் உஷ்ணத்தால் புண்கள் ஏற்படும். காதல் வெற்றியை தரும். திருமண முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு திருமணம் கைகூடும். வாரிசுகளுக்கு வேலைவாய்ப்புகள் அமையும். பு+ர்வீக சொத்துக்களின் மூலம் வருமானம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடனுதவிகள் கேட்ட இடங்களில் கிடைக்கும். மனைவியின் அணுகுமுறை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். மகிழ்வான சு+ழ்நிலை உருவாகும். பல முற்போக்கான சிந்தனையால் மகிழ்ச்சிகரமான மனநிலையை பெறுவீர்கள். எதிர்காலம் குறித்த சில திட்டங்களை தீட்டுவீர்கள். லாபங்களை புதிய முதலீடுகளாக மாற்றுவீர்கள். பெண்களுக்கு அனுகூலங்கள் சற்று குறைவான வாரமாகும். பேச்சுகளை குறைத்து அளவாக பேசுவதால் வீண் பழிகளுக்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.
பரிகாரம் :
புதன்கிழமை தோறும் துளசியால் பெருமாளை அர்ச்சித்து வழிபாடு செய்யவும்.
கடகம் :
நிர்வாக திறமைமிக்க கடக ராசி நேயர்களே! உடலில் சில வகை அலர்ஜிகள் தோன்றலாம். மனசஞ்சலம் கூடும். தன்னம்பிக்கை மேலோங்கும். பொருளாதார நிலையை சீராக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சற்று அமைதியை கடைபிடிப்பது அவசியமாகும். வலது கண்ணில் சில பாதிப்புகள் உருவாகும். பல்லில் தொந்தரவு உருவாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்மையை தரும். தாயின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கௌரவ பதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். திருமண முயற்சிகளில் சற்று தாமதப்படும். காதலிப்பவர்களுக்கு சோதனை காலமாகும். ஐப்பசி -15 ஆம் தேதிக்கு பின்னர் பெற்றோர்களிடம் பேசவும், புதிய தொழில் துவங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். திடீர் யோகங்களால் பிரபலமடைவீர்கள். கணவன் மனைவி ஈடுபாடு குறையும். வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு. மனதில் புதிய அமானுஷ்ய உணர்வுகளை உணருவீர்கள். உறவினர்களின் உதவியால் சாதகமான பலன்கள் உருவாகும்.
பரிகாரம் :
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு நேரத்தில் விஷ்ணு துர்க்கை தீபமேற்றி மலரிட்டு வழிபட்டு வரவும்.
Thursday, 26 October 2017
ஐப்பசி மாத ராசிபலன்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
ஐப்பசி மாத ராசிபலன்கள் !
மேஷம் :
எதிலும் புதுமையை எதிர்பார்க்கும் மேஷ ராசி நேயர்களே !
பு+ர்வீக சொத்துக்களின் மூலம் கடன் உதவிகள் கிடைக்கும். பு+ர்வீக சொத்துக்கள் தொடர்பாக சுமூகமான முடிவுகளை எதிர்கொள்ளவும். பங்காளிகளில் வயதில் மூத்தவர் ஒருவரின் தலையீட்டால் பாகப்பிரிவினையில் வருத்தங்களை தவிர்க்கலாம். இம்மாதம் முழுவதும் வாக்குறுதிகளை தவிர்க்கவும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. பொருளாதார தேக்க நிலை காணப்படும். ஐப்பசி 15ம் தேதிக்கு மேல் பொருளாதார நிலை சீராகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சற்று அதிகமான முயற்சிகள் தேவை. ஐப்பசி 10ம் தேதிக்கு மேல் அஷ்டம சனி விலகுவதால் 3 வருடமாக அனுபவித்து வந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, சோதனைகளை சாதனைகளாக்கி மகிழ்வீர்கள். இராசிக்கு குருபார்வை இருப்பதால் அனைத்திலும் வெற்றி காணலாம். மன உளைச்சல் அதிகமாகும். அதனால் ஆரோக்கியம் கெடும். காதலித்துக் கொண்டிருப்பவர்களிடையே இம்மாதம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு இம்மாதம் சோதனையான காலமாகும். கார்த்திகையில் புத்திர பாக்கியத்தை எதிர்பார்க்கலாம். மனைவி வழியில் சில சுபவிரயங்கள் ஏற்படும்.
பரிகாரம் :
செவ்வாய்க்கிழமை முருகனுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.
ரிஷபம் :
பண்புகளால் மேன்மை அடையும் ரிஷப ராசி நேயர்களே !
மனதில் பல இனம்புரியாத உணர்வுகள் மேலோங்கும். தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் விழிப்புணர்வு தேவை. பெரியோர்களின் ஆசி கிடைக்கும். முயற்சி வெற்றி தரும். பணிச்சுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிச்சுமை காரணமாக பணியில் இடப்பெயர்ச்சி ஏற்படும். புதிய காதல் உருவாகும். கண்டக சனி நடைபெறுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவும். தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது அவசியம். இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கு புதிய குருமார்களின் தரிசனமும், இறை தரிசனமும் கிடைக்கும். கண்பார்வை பாதிப்புக்கு ஆளாகி கண்ணாடி அணிய நேரிடும். நரம்பு சம்மந்தப்பட்ட உபாதை உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு வாங்கும் பணி, மற்றும் கட்டிட பணிகளில் தோய்வு நிலை உருவாகும். சொத்து சேர்க்கையில் தாமதப்படும். கால்நடைகள் வளர்ப்பவர்கள் கால்நடைகளை விழிப்புடன் கவனிக்க வேண்டும். நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உள்ளது. மனைவி மூலம் புதிய தொழில் முயற்சிகள் உருவாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். பு+ர்வீகத்தை உருமாற்றம் செய்வீர்கள்.
பரிகாரம் :
விநாயகரை அருகம்புல் வைத்து தண்ணீர் ஊற்றி மலரிட்டு பு+ஜை செய்வதனால் சிறந்த பலன்களை அடையலாம்.